Tuesday, September 22, 2009

நல்வரவை வேண்டும் புதுவரவு

என் பெயர் சில்வியா. அழகில் கிளியோபாட்ரா இல்லை. கவிதையில் சில்வியா பிளாத் இல்லை. கருணையில் அன்னை தெரேசா இல்லை. துணிவில் தஸ்லிமா நஸ்ருதீன் இல்லை. அடையாளமற்றுத் தெருவில் கடந்துபோகக்கூடிய கோடானுகோடி சாதாரண பெண்களில் ஒருத்தி. நிறைய வாசிப்பவள். சகமனிதரை நேசிப்பவள். வலைப்பூவொன்றை அமைத்து எழுதவந்திருக்கிறேன்.

முடிந்தவரை மொக்கை போடாமலிருக்க முயற்சிக்கிறேன். ஜல்லியடிக்காதிருக்க விளைகிறேன். ஜால்ராவைத் தவிர்க்கப் பார்க்கிறேன். இணைய அரட்டையின்போது எனது நண்பர்களிலொருவன் சொன்னான் "நீயொரு துணிச்சல்காரி"என்று. நான் சொன்னேன் "இல்லை... நானொரு கலகக்காரி"என்று. மரபார்ந்த சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் அனைத்து பிற்போக்கான சிந்தனைகளுக்குமெதிராகக் கலகக்குரல் எழுப்புவதே என் விருப்பம்.

'வா'என்று சொன்னால் மகிழ்வேன். 'வராதே'என்று சொன்னாலும் முகம்சுளியேன். 'கெத்தாக'வந்திருப்பதாக நினைக்கிறீர்கள் இல்லையா...? இந்த 'கெத்து'ம் இல்லையென்றால் எங்களைப் போன்ற பெண்களின் சத்தம் கேட்பதேது?

-சில்வியா

1 comment:

rvelkannan said...

//மரபார்ந்த சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் அனைத்து பிற்போக்கான சிந்தனைகளுக்குமெதிராகக் கலகக்குரல் எழுப்புவதே என் விருப்பம்.//
ஆஹா ... வருக வருக ...தோழி சில்வியா .. அன்பும் வாழ்த்துகளும்

Post a Comment